குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல்பாடுகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு


குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில்  வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல்பாடுகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு
x

குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல்பாடுகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு செய்தனர்.

கடலூர்

கடலூர்,

தமிழக அரசு, உலக வங்கி நிதி உதவியுடன் கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்படக் கூடிய தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல்பாடுகளை உலக வங்கி குழு பிரதிநிதி ஷோவிக், அர்ஷியா மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை இயக்க அலுவலர் அருள்ஜோதி அரசன், இளம் வல்லுனர் நசீர் ஆகியோரை கொண்ட குழுவினர் ஆய்வு செய்வதற்காக வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் குறிஞ்சிப்பாடி வட்டாரத்திற்குட்பட்ட கல்குணம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல்பாடுகளான காளாண் வளர்ப்பு குறித்த சமுதாய பண்ணை பள்ளி, ஆடுர் அகரம் ஊராட்சியில் குயவர் களை கொண்டு அமைக்கப்பட்ட செல்வவிநாயகர் மண்பாண்டம் தொழில் குழு செயல்பாடுகள்

மற்றும் நவீன முறை மண் பாண்ட உற்பத்தி குறித்து பத்மஸ்ரீ ஏ.மு. முனுசாமியை பயற்றுனராக கொண்டு நடத்தப்பட்டு வரும் சமுதாய திறன் பள்ளி, வழுதலம்பட்டு ஊராட்சியில் நடை பெற்று வரும் மணிலா சாகுபடி குறித்த சமுதாய பண்ணை பள்ளியை பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர்.

சமுதாய திறன் பள்ளி

தொடர்ந்து பண்ருட்டி வட்டாரத்திற்குட்பட்ட சிலம்பிநாதன்பேட்டையில் பலா மதிப்பு கூட்டுதல் தொடர்பான சமுதாய திறன் பள்ளி மற்றும் அண்ணாகிராமம் வட்டாரத்திற்குட்பட்ட சாத்திப்பட்டு ஊராட்சியில் முந்திரி உற்பத்தியாளர்கள் நிறுவன செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.

அதையடுத்து குறிஞ்சிப்பாடி வட்டார மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை திறந்து வைத்தனர். பாரத ஸ்டேட் வங்கி நெய்வேலி கிளையின் மூலம் தனிநபர் தொழில் முனைவோருக்கு ரூ.4 லட்சத்து 88 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. அனைத்து ஊராட்சிகளின் தொழில் சமூக வல்லுனர்களுடன் கலந்தாய்வு செய்தனர்.

ஆய்வின் போது மகளிர் திட்ட இயக்குகுனர் செந்தில் வடிவு, வாழ்ந்து காட்டுவோம் திட்ட, மாவட்ட செயல் அலு வலர் சுதாதேவி, இளம் வல்லுனர் செயல் அலுவலர்கள், பாரத ஸ்டேட் வங்கி, நெய்வேலி மற்றும் இந்தியன் வங்கி குறிஞ்சிப்பாடி கிளை மேலாளர்கள், திட்ட பணியாளர்கள் மற்றும் தொழில் நுட்ப ஆலோசகர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story