கோவிலம்பாக்கத்தில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு அண்ணா அவென்யூவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 20). இவர், ஸ்டவ் அடுப்பு பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார்.
இவருடைய தாய் மற்றும் சகோதரிகள் அருகில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் ராஜ்குமார் மட்டும் தனியாக இருந்தார். வேலை முடிந்து அவரது தாய் மற்றும் சகோதரிகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.
நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராஜ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், தூக்கில் தொங்கிய ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் காதல் தோல்வியால் மனம் உடைந்த ராஜ்குமார், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. அவரது தற்ெகாலைக்கு வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.