உலக செய்திகள்

கேரள வெள்ள பாதிப்பு: ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் முதல்வர் பினராயி விஜயன் + "||" + Fresh 2-day alert for Kerala districts; CM visits flood-hit areas with toll going up to 90

கேரள வெள்ள பாதிப்பு: ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் முதல்வர் பினராயி விஜயன்

கேரள வெள்ள பாதிப்பு: ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
திருவனந்தபுரம்:

கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலபரா பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.  நிலச்சரிவின் காரணமாக 60-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.

மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 20  பேர் உடல்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு ராணுவ வீரர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2  சிறுமிகள் உட்பட 20 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 40 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளா மாநிலத்தில் இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் பினராயி விஜயன் பார்வையிட்டார். முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இன்னும் 2 நாட்களுக்கு  கேரளாவுக்கு  கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளா வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்வு
கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.