உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் விலகல் + "||" + U.S. Senator Kamala Harris ends her presidential bid

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் விலகல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் விலகல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் அறிவித்துள்ளார்.
கலிபோர்னியா,

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினராக இருக்கும் கமலா ஹாரீஸ், ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். டிரம்ப் கொண்டு வந்த அமெரிக்க குடியுரிமைக் கொள்கை, மெக்சிகோ சுவர் விவகாரம், வரிவிதிப்புக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து செனட் சபையில் அவர் குரல் கொடுத்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கமலா ஹாரீஸ் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது தேர்தல் பிரசாரத்துக்காக உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் நன்கொடை வழங்கி வந்தனர்.

ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீஸ் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து, தனது ஆதரவாளர்களுக்கு ட்விட்டர் மூலம் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதில், "எனது பிரசாரத்தை நிறுத்திக் கொள்கிறேன், அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க தினமும் போராடுவேன். எனது வாழ்க்கையின் கடினமான முடிவுகளில் இதுவும்  ஒன்றாகும். எனது பிரசாரத்தை தொடர போதுமான நிதி ஆதாரம் இல்லை" என்று கமலா ஹாரீஸ் கூறியுள்ளார்.

கமலா ஹாரீசை கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப், இதுபற்றி,  “நாங்கள் உங்களை மிஸ் செய்வோம்” என்று கிண்டல் அடிக்கும் வகையில் ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த கமலா ஹாரீஸ் , “கவலை வேண்டாம் அதிபரே, உங்களை விசாரணையில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.

அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தியதாக டிரம்ப்,  விசாரணையை சந்தித்து வரும் நிலையில், அதனை வைத்து கமலா ஹாரீஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசி?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி கொண்டுவர டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பிடெனுக்கு, ஹிலாரி கிளிண்டன் ஆதரவு
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன், ஜோ பிடெனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
3. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: போட்டியில் இருந்து விலகினார் பெர்னி சாண்டர்ஸ்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக பெர்னி சாண்டர்ஸ் அறிவித்துள்ளார்.
4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் ஜோ பிடென் முன்னிலை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் ஜோ பிடென் முன்னிலை பெற்றுள்ளார்.
5. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்பை எதிர்த்து களமிறங்கப்போவது யார்?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டிரம்பை எதிர்த்து களமிறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.