கொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளை பாதிப்புகளை ஏற்படுத்தும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கொரோனா தொற்றின் லேசான பாதிப்பு கூட மூளைபாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.
லண்டன்
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சி ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, துஇங்கிலாந் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கெரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்றிலிருந்து விடுபட்டவர்களில் மட்டுமே இந்த மூளை பாதிப்பை அதிக அளவில் பார்க்க முடிவதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். சிலருக்கு கொரோனாவின் முதல் அறிகுறியாக இந்த மூளை பாதிப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் தற்போதுவரை, மூளை பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 12 பேருக்கு மூளை வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேருக்கு மயக்கம் இருந்ததும், 8 பேருக்கு நரம்பு சேதம் இருந்ததும், மேலும் 8 பேருக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தக் கூடிய நரம்பு மண்டல பாதிப்பு இருந்தததாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டோரில் 5 சதவீதம் பேர் உயிரிழந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குணமடைவதாகவும் ஆனால் சிலருக்கு இந்த மூளை பாதிப்பு நீண்டநாள் பிரச்சினையாக மாறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆரம்பகால நோயறிதல்களுக்கு உதவுவதற்கும் நோயாளியின் குணப்படுத்துதலை மேம்படுத்துவதற்கும் நரம்பியல் விளைவுகளின் ஆபத்து குறித்து மருத்துவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
எழுத்தாளரும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆலோசகர் நரம்பியல் நிபுணருமான மைக்கேல் சாண்டி கூறியதாவது:-
'மூளை அழற்சி போன்ற நரம்பியல் நிலைமைகளைக் கொண்ட நபர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்
இந்த நிலைமைகளின் தோற்றம், 'சுவாச அறிகுறிகளின் தீவிரத்தோடு எப்போதும் தொடர்பு இல்லை.
நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் கொரோனா நோயாளிகளின் இந்த சிக்கல்களைக் கவனிக்க வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story