10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக 'பயிற்று மொழி' சேர்க்கப்படுகிறது - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு


10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக பயிற்று மொழி சேர்க்கப்படுகிறது - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2021 5:28 AM GMT (Updated: 22 Nov 2021 5:28 AM GMT)

நடப்பு கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக பயிற்று மொழி சேர்க்கப்படுகிறது என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அறிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

நடப்பு கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக பயிற்று மொழி சேர்க்கப்படுகிறது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்ற விவரம் வகுப்பு வாரியாக சேர்க்கப்பட உள்ளது.

மாணவர்களின் பயிற்று மொழி விவரங்களை தனித்தனியே இணையதளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பணிகளில் 20% இட ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக என அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.

Next Story