விரைவில் டிஜிட்டல் பணம் வெளியிட மத்திய அரசு திட்டம்


விரைவில் டிஜிட்டல் பணம் வெளியிட மத்திய அரசு திட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2021 8:48 AM GMT (Updated: 24 Nov 2021 8:48 AM GMT)

விரைவில் டிஜிட்டல் பணம் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதற்கு 26 மசோதாக்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்றாக, நாட்டில் புழக்கத்தில் இருக்கும் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை  செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு நேற்று பட்டியலிட்டது.

இந்தநிலையில்,  கிரிப்டோகரன்சி மோகம் அதிகரித்து வரும் சூழலில் விரைவில் டிஜிட்டல் பணம் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டிஜிட்டல் பணம் வெளியிடுவதற்கான மசோதாவை வரும் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த மசோதாவின்படி, ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சிக்கு அனுமதி அளிக்கப்படும்.

Next Story