மாநில செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம் + "||" + Madhya pradhesh chief Minister sivarajsingh chougan offers prayers at srivalliputhur andal temple

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது இந்த கோவில் வைணவ தலங்களிலேயே மிகவும் முக்கியமானதாகும். இக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

அந்த வகையில், மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான்.,அவருடைய மனைவி சாதனா சிங் குடும்பத்தினருடன் இன்று காலை 10 மணியளவில் ஆண்டாள் கோவிலில்  சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஆண்டாள் படம் மற்றும் ஆண்டாள் கிளி பிரசாதம் வழங்கப்பட்டது.  

அதன்பிறகு ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதாவுக்கு சிவராஜ் சிங் சவுகான் உணவு பொருட்களை வழங்கினார்.அதன் பிறகு ஆண்டாள் பிறந்த இடம் தங்கத்தேர் பெரியபெருமாள் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார் பிறகு தமிழக அரசின் முத்திரை சின்னமான ஆண்டாள் கோவில் கோபுரத்தையும் பார்வையிட்டார்  சிவராஜ்சிங் சவுகான் வருகையால் கோவிலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒரே நேரத்தில் எழுந்தருளிய தெய்வங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைெயாட்டி அனைத்து தெய்வங்களும் ஒரே நேரத்தில் சேர்ந்து எழுந்தருளி காட்சி அளித்தனர்.
2. ஆண்டாள் கோவிலில் தங்கத்தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றுவரும் ஆடிப்பூர விழாவில் நேற்று தங்கத்தேரோட்டம் நடந்தது.
3. பட்டு வஸ்திரங்கள் ஆண்டாள் கோவிலுக்கு வந்தன
ஆடிப்பூரத்தையொட்டி ஸ்ரீரங்கம், கள்ளழகர் கோவில்களில் இருந்து பட்டு வஸ்திரங்கள் ஆண்டாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தன.
4. ஆண்டாள் கோவிலில் சயன சேவை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று சயன சேவை நடைபெறுகிறது.
5. ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.