சினிமா செய்திகள்

கமல்ஹாசன்; கலை உலகை ஆஹா என ஆச்சரியப்பட வைக்க சீக்கிரம் வாருங்கள் - இளையராஜா + "||" + Come quickly to amaze the art world as Aha - Ilayaraja

கமல்ஹாசன்; கலை உலகை ஆஹா என ஆச்சரியப்பட வைக்க சீக்கிரம் வாருங்கள் - இளையராஜா

கமல்ஹாசன்; கலை உலகை ஆஹா என ஆச்சரியப்பட வைக்க சீக்கிரம் வாருங்கள் - இளையராஜா
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குணமடைய இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம்  அறிக்கை வெளியிட்டது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் பூரண நலம் பெற வாழ்த்தி இசையமைப்பாளர் இளையராஜா  டுவீட் செய்துள்ளார்.

அதில், நலமாக வரவேண்டும் சகோதரரே...கலை உலகை ஆ……….ஹா…………என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம் என பதிவிட்டுள்ளார்.