தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது ஏன்? - சரத் பவார் கருத்து + "||" + Centre Wouldn't Have Decided To Repeal Farm Laws If ...": Sharad Pawar

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது ஏன்? - சரத் பவார் கருத்து

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது ஏன்?  - சரத் பவார் கருத்து
உத்தரப் பிரதேச தேர்தல் மட்டும் இல்லாவிட்டால் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றிருக்கப்படாது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை,

உத்தரப் பிரதேச தேர்தல் மட்டும் இல்லாவிட்டால் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற்றிருக்கப்படாது என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வருகிறது. இன்னும் சில மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறது. எங்களுக்குக் கிடைத்தத் தகவலின்படி, தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்குப் பாஜகவினர் செல்லும் போது அதுவும் குறிப்பாக கிராமப்பகுதிகளில் அவர்களுக்கு சரியான வரவேற்பு இல்லை. வாக்கு கேட்டு செல்லும் போது இதே நிலைதான் இருக்கும் என்பதை பாஜகவினர் உணர்ந்து விட்டனர். இந்தப் பின்னணியில் தான் வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். 

வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த நில தினங்களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு: விவசாய சங்கங்கள்
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர்.
2. “பூஸ்டர் தடுப்பூசி; மத்திய அரசு அறிவித்தால் தமிழக அரசு செயல்படுத்தும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பூஸ்டர் தடுப்பூசி குறித்து மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வந்தால், தமிழக அரசு அதனை செயல்படுத்தும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
3. வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசுக்கு அச்சம்: ராகுல் காந்தி விமர்சனம்
விவாதங்கள் இன்றி வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என ராகுல் காந்தி சாடியுள்ளார்.
4. புதிய வகை கொரோனா வைரஸ்: மத்திய அரசு என்ன செய்ய போகிறது..? - சுப்ரீம்கோர்ட்டு கேள்வி
புதிய வகை ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்று சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
5. சாலை விபத்தின் போது உதவி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு அறிவிப்பு
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களுக்கு ரூ.5000/- பரிசாக வழங்கப்படும்.