மாநில செய்திகள்

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை? + "||" + Leave Announced for Schools in 2 districts of Tamilnadu due to rain

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?
கனமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக , தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக திருவள்ளூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
3. டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
நெல்லை, தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.