மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து 62 நாளாக பாதிப்பு குறைந்தது + "||" + In Tamil Nadu, the incidence has been low for 62 consecutive days

தமிழகத்தில் தொடர்ந்து 62 நாளாக பாதிப்பு குறைந்தது

தமிழகத்தில் தொடர்ந்து 62 நாளாக பாதிப்பு குறைந்தது
தமிழகத்தில் இன்று 739 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து 62 நாளாக பாதிப்பு குறைந்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில், 739 ஆக தொற்றுப் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,23,245 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 764 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,78,371 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில்  8,442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,432 ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் 107 பேருக்கும் கோயம்புத்தூரில் 112 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, கோவையில் தொற்றுப் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.