மாநில செய்திகள்

நடிகை புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் + "||" + Former minister Manikandan summoned over actress' complaint

நடிகை புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன்

நடிகை புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன்
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட  படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் அடைப்படையில் மணிகண்டன் கைது வழக்கு பதிவு செய்தது. பின்னர், போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு கடந்த ஜூலை 7ஆம் தேதி நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் 341 பக்க குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், நடிகை தொடர்ந்த பாலியல் வழக்கில் ஜனவரி 4-ம் தேதி நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.