மறு வாக்கு எண்ணிக்கையில் விஸ்கான்சின், பென்சில்வேனியாவில் டொனால்டு டிரம்ப் வெற்றி


மறு வாக்கு எண்ணிக்கையில் விஸ்கான்சின், பென்சில்வேனியாவில் டொனால்டு டிரம்ப் வெற்றி
x
தினத்தந்தி 14 Dec 2016 6:48 AM GMT (Updated: 2016-12-14T12:18:17+05:30)

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8-ந்தேதி நடந்தது. அதில் டொனால்டு டிரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.அதை தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. விஸ்கான்சின் மற்றும் பென்சில் வேனியா மாகா ணங்களில் மறு

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8-ந்தேதி நடந்தது. அதில் டொனால்டு டிரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். ஹிலாரி கிளிண்டன்  அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.அதை தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. விஸ்கான்சின் மற்றும் பென்சில் வேனியா மாகா ணங்களில் மறு வாக்கு எண் ணிக்கை நடத்த வேண்டும் என்று கிரீன் கட்சி வேட்பாளர் கோரிக்கை விடுத்தார்.

அதை  தொடர்ந்து விஸ்கான்சின் மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதில் டிரம்ப்  ஹிலாரிகிளிண் டனை விட  23 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக  பெற் றார். அதன்  மூலம் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட்டது.

பென்சில் வேனியாவில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் விஸ்கான்சின், பென்சில்வேனியா மாகா ணங்களில் டிரம்ப் வெற்றி  உறுதி செய்யப்பட்டது.


Next Story