உலகைச்சுற்றி


உலகைச்சுற்றி
x
தினத்தந்தி 16 Dec 2016 11:26 PM GMT (Updated: 2016-12-17T04:56:17+05:30)

* ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ (வயது 82) காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் காரணமாக அவதிப்படுகிறார். இதன் காரணமாக நேற்று அவர் தனது வழக்கமான கடமைகளை ரத்து செய்துவிட்டார். * இந்திய அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்த ஆலோசனை குழுவின் உறுப்பினராக இந்திய வம்சாவளி

* ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ (வயது 82) காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் காரணமாக அவதிப்படுகிறார். இதன் காரணமாக நேற்று அவர் தனது வழக்கமான கடமைகளை ரத்து செய்துவிட்டார்.

* இந்திய அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்த ஆலோசனை குழுவின் உறுப்பினராக இந்திய வம்சாவளியை சேர்ந்த வல்லுனர் விஜய் சஜாவால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதை அமெரிக்க வர்த்தக மந்திரி பென்னி பிரிட்ஜ்கர் நேற்று அறிவித்தார்.

* உலக அளவில் இடம்பெயர்ந்துள்ளவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். 1 கோடியே 56 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். 2-வது இடத்தில் மெக்சிகோ, 3-வது இடத்தில் ரஷியா, 4-வது இடத்தில் சீனா மக்கள் உள்ளனர்.

* அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்பை நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் ஷலப்குமார் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசும்போது, “இந்திய பாகிஸ்தான் நட்புறவுக்கு டிரம்ப் ஆதரவாக இருப்பார்” என கூறினார்.

* டோக்கியோ சென்றிருந்த ரஷிய அதிபர் புதின் அங்கு நேற்று கூறுகையில், “பொருளாதார ஒத்துழைப்புக்கு உதவும் அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஜப்பானுடன் செய்துகொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக பிரதமர் ஷின்ஜோ அபேயிடம் விவாதித்தேன்” என்றார்.

* தென் கொரியாவில் பறவைக்காய்ச்சல் பரவுகிறது. இதையடுத்து அங்கு கோழிகளையும், பிற வளர்ப்பு பறவைகளையும் கொன்று புதைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story