உலகைச்சுற்றி


உலகைச்சுற்றி
x
தினத்தந்தி 18 Dec 2016 10:00 PM GMT (Updated: 2016-12-19T03:30:14+05:30)

* பசிபிக் தீவு நாடான சாலமன் தீவுகளில் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 4.46 மணிக்கு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 39 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு தாக்கிய இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலிலி 6 புள்ளிகளாக பதிவானது. பாதிப்புகள் குறித்து தகவல் இல்லை.

* பசிபிக் தீவு நாடான சாலமன் தீவுகளில் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 4.46 மணிக்கு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 39 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு தாக்கிய இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலிலி 6 புள்ளிகளாக பதிவானது. பாதிப்புகள் குறித்து தகவல் இல்லை.

* சர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் பகுதியில், அமெரிக்க கடற்படையின் ஆளில்லா நீர்மூழ்கி ஒன்றை சீன கடற்படை கைப்பற்றியது. இந்த நீர்மூழ்கியை சரியான முறைப்படி திரும்பத்தர சீனா ஒப்புக்கொண்டது. ஆனால் அந்த நீர்மூழ்கியை சீனா வைத்துக்கொள்ளுமாறு அமெரிக்கா விட்டு விட வேண்டும் என்று அந்த நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் கூறி உள்ளார்.

* வடகொரியாவுடன் உறவு வைத்துக்கொண்டதின் நிமித்தமாக 5 கப்பல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்திருந்தது. ஆனால் இந்த கப்பல்கள், வடகொரியாவின் ஓசியன் மெரிடைம் மேனேஜ்மெண்ட் கம்பெனியின் பொருளாதார ஆதாரமாக திகழவில்லை என்று தெரியவந்துள்ளதால், அவற்றின் மீதான தடையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விலக்கிக்கொண்டுள்ளது.

* எல்லையில் பதற்றம் அதிகரித்ததின் நிமித்தமாக இந்திய திரைப்படங்களை திரையிடுவதில்லை என்று பாகிஸ்தான் திரையரங்கு அதிபர்கள் முடிவு எடுத்து அமல்படுத்தினர். இந்த முடிவை இப்போது திரும்பப்பெற்றுள்ளனர். இதையடுத்து இன்று முதல் பாகிஸ்தான் திரையரங்குகளில் இந்திய திரைப்படங்கள் வெளியிடப்படும்.

* பாலஸ்தீனிய வாலிபர் ஒருவர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்கு கரை பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்குள் நேற்று நுழைந்தார். அவரை இஸ்ரேல் படைகள் சுட்டுக்கொன்று விட்டன. இந்த தகவலை பாலஸ்தீன சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Next Story