போதைப்பொருள் உட்கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த அரிசோனா அழகி கைது


போதைப்பொருள் உட்கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த அரிசோனா அழகி கைது
x
தினத்தந்தி 19 Dec 2016 10:10 AM GMT (Updated: 2016-12-19T15:40:47+05:30)

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் அழகியாக 2013 ஆம் ஆண்டு தேர்ந்து எடுக்கபட்டவர் கிறிஸ்டின் சோரிச்லிசையுஸ் ( வயது 26) இவரது கணவர்டன் சேர்ந்து கொக்கையின் என்ற போதை பொருளை உட்கொண்டு உள்ளார். பின்னர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உள்ளார். இதனால் குழந்தை

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் அழகியாக 2013 ஆம் ஆண்டு தேர்ந்து எடுக்கபட்டவர் கிறிஸ்டின் சோரிச்லிசையுஸ் ( வயது 26) இவரது கணவர்டன் சேர்ந்து கொக்கையின் என்ற போதை பொருளை உட்கொண்டு உள்ளார். பின்னர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உள்ளார். இதனால் குழந்தை  மயக்கம் அடைந்து உள்ளது. உடனடியாக குழந்தையை   ஒரோ வாலி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்ய முயன்றபோது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ஆனால் குழந்தையை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்ற ஒப்புகொண்டனர். இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் டையமண்ட் குழந்தைகள் நல் மருத்துவமனைக்கு குழந்தையை மாற்றி உள்ளனர். ஆனால் அங்கும் குழந்தைக்கு நச்சுயியல் சோதனை நடத்த  மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதை தொடர்ந்து குழந்தைகள் நல துறைக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

பின்னர் குழந்தைகள் நல அதிகாரிகள் உதவியுடன் குழந்தைக்கு  பரிசோதனை நடத்தப்பட்டது அப்போது குழந்தையின் தயார் போதை மருந்தை உட்கொண்டு குழ்ந்தைக்கு  தாய்ப்பால் கொடுத்து இருப்பது தெரிய வந்து உள்ளது.

இதை தொடர்ந்து போலீசார் கிறிஸ்டின் வீட்டில் சோதனை நடத்தி கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Next Story