பாகிஸ்தானில் நடைபெறும் பிராந்திய மாநாட்டை இந்தியா புறக்கணித்ததாக தகவல்

பாகிஸ்தானில் நடைபெறும் பிராந்திய மாநாட்டை  இந்தியா புறக்கணித்ததாக தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2016 9:38 AM GMT (Updated: 20 Dec 2016 9:38 AM GMT)

பாகிஸ்தானில் ஆசிய பசுபிக் நாடுகளின் நீடித்த வளர்ச்சி தொடர்பாக நடைபெறும் பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இந்தியா, வங்காளதேசம், ஈரான் ஆகிய நாடுகள் புறக்கணித்ததாக அங்குள்ள ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆசிய மற்றும் தொழில்நுட்ப மாற்றத்திற்கான பசிபிக் மையம் (APCTT) மாநாடு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் நேற்று துவங்கியது. நீடித்த வளர்ச்சிக்காக புதுமையான திட்டங்களை ஊக்குவிப்பதும் யுக்திகள் குறித்து விவாதிக்கவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இஸ்லமாபாத்,
 
இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் கலந்து கொள்வதாக இருந்ததாகவும் பின்னர் இறுதி நேரத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாகவும் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாநாடு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இந்திய பிரநிதிகள் பயணத்தை ரத்து செய்ததாகவும், இந்திய பிரதிநிதிகள் குழு தலைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பயணம் ரத்து ஆனதாகவும் இந்தியா தரப்பில் கூறியதாக அந்நாட்டு செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  APCTT அமைப்பின் 12-வது நிர்வாக குழுவை கூட்டியது. இந்த குழுவில் உறுப்பு நாடாக உள்ள 14 பேருக்கும் அழைப்பு அனுப்பட்ட நிலையில், இந்தியா, வங்காளதேசம், ஈரான் ஆகிய நாடுகள் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்துள்ளது. இந்த மாநாட்டில், சீனா, பிஜி, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் சமோ, தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இந்த மாநாட்டில் 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டன.

முன்னதாக கடந்த நவம்பரில் இஸ்லமாபாத்தில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இந்தியா புறக்கணித்தது. பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது நினைவிருக்கலாம்.

Next Story