இரு சுவர்களுக்கு இடையில் 3 நாட்களாக மாட்டி கொண்டு தவித்த சிறுவன்

இரு சுவர்களுக்கு இடையில் 3 நாட்களாக மாட்டி கொண்டு தவித்த சிறுவன்
x
தினத்தந்தி 21 Dec 2016 6:04 AM GMT (Updated: 2016-12-21T11:34:07+05:30)

நைஜீரியாவில் மூன்று நாட்கள் சுவருக்கு மத்தியில் சிக்கித்தவித்த சிறுவனை பொதுமக்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நைஜீரியா நாட்டின் ஒடுடுவா பகுதியைச் சேர்ந்தவர் அடுராக்பிமி சக (12). இவர் தன் வீட்டில் சுமார் 12 அடி அங்குளமுள்ள மதில் சுவர் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென்று சிறுவன் அந்த 12 அடி அங்குளமுள்ள சுவர் இடைவெளியில் விழுந்துள்ளார். இரு சுவருக்கும் மத்தியில் விழுந்தால் அங்கிருந்தவர்கள் யாருக்கு இச்சிறுவன் தென்படவில்லை.

ஆனால் கிழே விழுந்த பதற்றத்தில் சிறுவன் தொடர்ந்து கூச்சலிட்டுள்ளார். இது போன்று தொடர்ந்து மூன்று நாட்கள் சத்தம் போட்டுள்ளான். ஆனால் அங்கிருந்த பொதுமக்களே சற்று பதற்றமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த மதில் சுவரை உடைக்கும் படி கூறியுள்ளனர். மதில் சுவரை உடைக்கும் போது சிறுவன் தொடர்ந்து கூச்சலிட்டுள்ளான். இதனால் பதற்றமடைந்த அவர்கள் சற்று நிதானமாக சுவரை உடைக்கத் துவங்கியுள்ளனர்.

அப்போது சிறுவன் தூசி படிந்த நிலையில் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளியே வந்த சிறுவன் உடனடியாக தன் பாட்டியின் மடியில் அமர்ந்து அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், தான் இங்கிருந்தவர்களிடம் மதில் சுவரில் ஒரு குரல் வருகிறது என்று கூறியதாகவும், ஆனால் அவர்களே சற்று குழப்பமடைந்து, பொலிசாருக்கு தகவல் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

Next Story