54 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்களுடன் டெல்லி விமானநிலையத்தில் நைஜீரியர் கைது


54 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்களுடன் டெல்லி விமானநிலையத்தில் நைஜீரியர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2016 6:51 AM GMT (Updated: 2016-12-23T12:21:22+05:30)

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 54 லட்சம் மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுக்களுடன் நைஜீரிய நாட்டைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 54 லட்சம் மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுக்களுடன் நைஜீரிய நாட்டைச்சேர்ந்த ஒருவர் பிடிபட்டுள்ளார்.

அதிகாலை 2.30 மணியளவில் டெல்லியில் இருந்து கோயம்புத்துர் செல்ல திட்டமிட்டு இருந்த  அவரை மத்திய ஆயுதப்படை இடைமறித்து விசாரணை நடத்தியது. அப்போது அவரிடம் 58 லட்சம் ரூபாய் ரொக்கமாக இருந்தது தெரியவந்தது. இதில் ரூ.54 லட்சம் புதிய நோட்டுக்களாகும். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்த பின் நைஜீரிய நாட்டவரை  செல்ல ஆயுதப்படை போலீசார் அனுமதி அளித்தனர்.


Next Story