ஆப்கானிஸ்தானில் தலீபான் தலைவர் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலீபான் தலைவர் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-25T01:49:29+05:30)

அமெரிக்க தாக்குதலுக்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடத்தினர். அப்போது பாகிஸ்தானுக்கான தலீபான் தூதராக பணியாற்றியவர், முல்லா அப்துல் சலிம் ஜாயீப்.

காபூல்,

அமெரிக்க தாக்குதலுக்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடத்தினர். அப்போது பாகிஸ்தானுக்கான தலீபான் தூதராக பணியாற்றியவர், முல்லா அப்துல் சலிம் ஜாயீப்.

தற்போது அவர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது வீட்டின்மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்கள்.

இந்த தாக்குதலில் ஒருவர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தாக்குதல் நடந்தபோது முல்லா அப்துல் சலிம் ஜாயீப் வீட்டில் இல்லை.

இந்த சம்பவம் குறித்து காபூல் போலீஸ் குற்றப்புலனாய்வு துறை தலைவர் பிரைதூன் ஒபைதி நேற்று கூறுகையில், “முல்லா அப்துல் சலிம் ஜாயீப் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் யார், அதன் பின்னணி என்ன என்பது தெரியவரவில்லை. 2 பேர் வந்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பி உள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

காபூலில் ஹெல்மாண்ட் மாகாண எம்.பி., மிர்வாலியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில் இந்த தாக்குதல் நடந்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story