ஜெர்மனியில் 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்; இரண்டாம் உலகப்போரில் வெடிக்காத குண்டு செயல் இழப்பு


ஜெர்மனியில் 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்; இரண்டாம் உலகப்போரில் வெடிக்காத குண்டு செயல் இழப்பு
x
தினத்தந்தி 26 Dec 2016 6:25 AM GMT (Updated: 2016-12-26T11:54:53+05:30)

இரண்டாம் உலகப் போரின் போது கடந்த 1944-ம் ஆண்டில் ஜெர்மனி மீது இங்கிலாந்து வெடிகுண்டு வீசி தாக்கியது. அதில் வெடிக்காத ஒரு மிகப்பெரிய வெடிகுண்டு ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் நகரில் கட்டிடம் கட்டுவதற்கான பணி நடைபெற்ற போது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு ஒரு டன்னிற்கும் அதிகமான எடை கொண்டதாக தென்பட்டது. இதனையடுத்து இதனை செயல் இழக்க செய்யும் பணி தொடங்கியது. வெடிகுண்டை செயல் இழக்க செய்யும் பணியை கிறிஸ்துமஸ் தினத்தில் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.பெர்லின்,

ஜெர்மனியில் 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு, இரண்டாம் உலகப்போரில் வெடிக்காத குண்டுகள் செயல் இழப்பு செய்யப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது கடந்த 1944-ம் ஆண்டில் ஜெர்மனி மீது இங்கிலாந்து வெடிகுண்டு வீசி தாக்கியது. அதில் வெடிக்காத ஒரு மிகப்பெரிய வெடிகுண்டு ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் நகரில் கட்டிடம் கட்டுவதற்கான பணி நடைபெற்ற போது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு ஒரு டன்னிற்கும் அதிகமான எடை கொண்டதாக தென்பட்டது. இதனையடுத்து இதனை செயல் இழக்க செய்யும் பணி தொடங்கியது. வெடிகுண்டை செயல் இழக்க செய்யும் பணியை கிறிஸ்துமஸ் தினத்தில் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

 விடுமுறை நாளான அன்று மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் தேர்வு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்து உள்ளது. எனவே, கிறிஸ்துமஸ் நாளில் ஆக்ஸ்பர்க் நகரில் வசிக்கும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து காலை வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ஆக்ஸ்பர்க் நகருக்கு வெளியே புறநகரில் உள்ள பள்ளிகள் மற்றும் விளையாட்டு மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் தலா 1.8 டன் எடையுள்ள வெடிக்காத வெடிகுண்டை பாதுகாப்பு படை அதிகாரிகள் வெற்றிகரமாக செயல் இழக்க செய்தனர்.  

ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படுவது ஒன்றும் புதியது கிடையாது. 

கடந்த 1944-ம் ஆண்டு 25-26 தேதிகளில் வரலாற்று பழமை வாய்ந்த ஆக்ஸ்பர்க் நகரில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவம் சரமாரியாக வெடிகுண்டுகளை வீசியது, இதனால் நகரம் பெரும் சீரழிவை சந்தித்தது.

Next Story