விபத்திற்குள்ளான ரஷ்ய விமானத்தின் கருவி முறையற்ற வகையில் இயங்கியது: போக்குவரத்து துறை மந்திரி தகவல்

விபத்திற்குள்ளான ரஷ்ய விமானத்தின் கருவி முறையற்ற வகையில் இயங்கியது:  போக்குவரத்து துறை மந்திரி தகவல்
x
தினத்தந்தி 29 Dec 2016 11:17 AM GMT (Updated: 2016-12-29T16:46:58+05:30)

கருங்கடலில் விழுந்து விபத்திற்குள்ளான ரஷ்ய ராணுவ விமானத்தின் கருவி முறையற்ற வகையில் இயங்கியது என அந்நாட்டு போக்குவரத்து துறை மந்திரி இன்று கூறியுள்ளார்.

மாஸ்கோ,

கருங்கடலில் விழுந்து விபத்திற்குள்ளான ரஷ்ய ராணுவ விமானத்தின் கருவி முறையற்ற வகையில் இயங்கியது என அந்நாட்டு போக்குவரத்து துறை மந்திரி இன்று கூறியுள்ளார்.

ஆனால், விமானம் விபத்திற்குள்ளானதற்கு என்ன காரணம் என்பதற்கு இதனை உடனே கூறிவிட முடியாது.  அந்த கருவி முறையாக இயங்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.  அது ஏன் அப்படி நடந்தது என்பது பற்றி நிபுணர்கள் கண்டறிய உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ரஷ்ய ராணுவ விமானம் விபத்திற்குள்ளான சம்பவத்தின் முதற்கட்ட முடிவுகள் வருகிற ஜனவரியில் வெளியிடப்பட கூடும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Next Story