உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 30 Dec 2016 10:30 PM GMT (Updated: 30 Dec 2016 6:27 PM GMT)

* துருக்கியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுகிற 30 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். * இந்தோனேசியாவில் சும்போவா தீவு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கம், கடலுக்கு அடியில் மையம்

* துருக்கியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுகிற 30 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

* இந்தோனேசியாவில் சும்போவா தீவு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கம், கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்தது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை.

* ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டேமியன் ஓ நீல் (வயது 40) என்பவர், நேற்று முன்தினம் லண்டனில் இருந்து சிட்னிக்கு விமானத்தில் வந்து இறங்கியபோது, ஆஸ்திரேலிய பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர் கைது செய்தனர்.

* சீனாவில் உள்நாட்டு பாதுகாப்பு துணை மந்திரி பதவி வகித்த மாஜியான் என்பவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி அவர் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தப்போவதாக ஆளும் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்துள்ளது.

* நேபாளமும், சீனாவும் முதல் முறையாக அடுத்த ஆண்டு கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடப்போவதாக நேபாளத்தில் ஊடக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* ஜெருசலேம் அருகே இஸ்ரேல் சோதனை சாவடி அருகே கத்தியுடன் வந்த பாலஸ்தீனப்பெண் ஒருவர் நேற்று சுடப்பட்டார்.


Next Story