நெருப்பை பயன்படுத்தி முடி வெட்டும் சலூன்கடைக்காரர் வீடியோ


நெருப்பை பயன்படுத்தி முடி வெட்டும் சலூன்கடைக்காரர் வீடியோ
x
தினத்தந்தி 14 Jan 2017 9:32 AM GMT (Updated: 2017-01-14T15:55:06+05:30)

பாகிஸ்தானில் சலூன்கடைக்காரர் ஒருவர் கத்தரிக்கோலுக்கு பதிலாக நெருப்பை பயன்படுத்தி மூடி வெட்டும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஓமர் குரேஷி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் சலூன் கடைக்காரர் ஒருவர் அங்கு முடிவெட்ட வரும் வாடிக்கையாளர்களின் தலையில் கத்திரிக்கோலுக்கு பதிலாக தீ வைத்து முடியை சரிசெய்கிறார்.

முதலில் முடிவெட்டிக்கொள்ள வந்திருப்பவரின் தலையில் கிரீம் மற்றும் பவுடரை தடவி அதில் தீ வைக்கிறார். தீ நன்கு எரிந்து கொண்டிருக்கும் போது சீப்பினால் முடியை வேகமாக சீவுகிறார். அவ்வாறு சீவும் போது தீ அணைந்துவிடுகிறது.

தலை முடியில் தீ வைத்தாலும் கூட முடி தீப்பற்றி எரியவும் இல்லை, அளவும் குறையவில்லை. முடியை நேர்படுத்துவதற்காக இ்வ்வாறு செய்யப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது குறித்து சமூகவலைத்தளங்களில் ஒரு சிலர் இது ஆபத்து என்றும் ஒரு சிலர் இதை ஆதரித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story