பப்புவா நியூ கினியாவில் பயங்கர நில நடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பதற்றம்


பப்புவா நியூ கினியாவில் பயங்கர நில நடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பதற்றம்
x
தினத்தந்தி 22 Jan 2017 1:59 PM GMT (Updated: 2017-01-22T19:29:45+05:30)

பசிபிக் பெருங்கடல் தீவு நாடு பப்புவா நியூ கினியா.

சிங்கப்பூர்,

மக்கள் தொகை அடர்த்தி குறைந்த இந்த நாடு, புவித்தட்டுகள் அடிக்கடி நகர்கிற இடத்தில் அமைந்துள்ளதால், அடிக்கடி நில நடுக்கத்துக்கு ஆளாகிறது.

இந்த நிலையில், அந்த நாட்டில் போகெயின்வில்லே தீவில் அரவா நகருக்கு 47 கி.மீ. மேற்கே நேற்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக இந்த நில நடுக்கம் பதிவானது.

இந்த நில நடுக்கம் 154 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் தாக்கம் பப்புவா நியூ கினியாவில் மட்டுமல்லாது அண்டை நாடான சாலமன் தீவிலும் உணரப்பட்டுள்ளது.

நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியில் வீதிகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் வந்து தஞ்சம் புகுந்தனர்.

இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை வெளியிட்டது. பின்னர் திரும்பப்பெறப்பட்டது.

நில நடுக்கம் தொடர்பாக அந்த நாட்டின் புவி இயற்பியல் ஆய்வு மையத்தின் உதவி இயக்குனர் கிறிஸ் மெக்கீ கூறும்போது, ‘‘இந்த நில நடுக்கம், மிகவும் ஆழமான பகுதியில் நேரிட்டதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே எங்கிருந்தும் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை’’ என குறிப்பிட்டார்.


Next Story