பிரெக்ஸிட் விவகாரம்: பிரிட்டன் அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு


பிரெக்ஸிட் விவகாரம்:  பிரிட்டன் அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 24 Jan 2017 4:22 PM GMT (Updated: 24 Jan 2017 4:22 PM GMT)

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகிய விவகாரத்தில் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என பிரிட்டன் அரசுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


லண்டன்:

கடந்தாண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது குறித்து பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது, 55% பொதுமக்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதனால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.மேலும், இதில் உடன்பாடு இல்லாததால் அப்போதிய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். அவரையடுத்து புதிய பிரதமராக தெரேசா மே பொறுப்பேற்றார். 

இந்நிலையில், அந்நாட்டு நீதிமன்றத்தில் இவ்விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

பிரெக்ஸிட் தீர்மானத்தால் ஏற்படும் சாதகமான அம்சங்கள் குறித்து பிரிட்டன் அரசு சார்பில் நீதிமன்றத்தில் எடுத்துவைக்கப்பட்டது. ஆனால், ஒரு இத்தீர்மானம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வைத்த பின்னர் தேவையான அம்சங்களை வைத்திருக்கவும், தேவையற்றதை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்த்தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இறுதியில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது குறித்து பாராளுமன்றத்தில் முதலில் சட்டம் பிறப்பித்து தீர்மானம் நிறைவேற்றுங்கள். அதுவரை விலகுவதற்கான பணிகளை தொடங்கக் கூடாது என உத்தரவிட்டார். இதனால் அரசின் நடவடிக்கையில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.பாரளுமன்றத்தில் தீர்மானத்தை தாக்கல் செய்வது குறித்த பூர்வாங்க பணிகளில் பிரதமர் அலுவலகம் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.


Next Story