இலங்கையில் தமிழர்கள் உண்ணாவிரதம் 4–வது நாளாக நீடிப்பு


இலங்கையில் தமிழர்கள் உண்ணாவிரதம் 4–வது நாளாக நீடிப்பு
x
தினத்தந்தி 26 Jan 2017 7:30 PM GMT (Updated: 2017-01-26T23:57:38+05:30)

இலங்கையில் கடந்த 1983–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போரில் சுமார் 65 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனார்கள்.

கொழும்பு,

இலங்கையில் கடந்த 1983–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போரில் சுமார் 65 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனார்கள். அவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக தனி அலுவலகம் ஒன்றை அமைக்க வகை செய்யும் மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நிறைவேற்றப்பட்டது. என்றாலும் காணாமல் போனவர்களின் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில், காணாமல் போனவர்களை பற்றிய தகவல்களை அரசாங்கம் சரிவர தெரிவிக்க வேண்டும் என்றும், அவர்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி அவர்களுடைய உறவினர்கள் வவுனியா நகரில் கடந்த திங்கட்கிழமை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த உண்ணாவிரதம் நேற்று 4–வது நாளாக நீடித்தது. உண்ணாவிரதம் இருப்பவர்களில் 4 பெண்களின் உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது.

இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அதிபர் சிறிசேனாவுக்கு வடக்கு மாகாண முதல்–அமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம் உள்ளார். 

Next Story