பிலிப்பைன்சில் போர் பயிற்சியில் ஈடுபட்ட மாலுமியை கொன்று 7 ஊழியர்கள் கடத்தல்


பிலிப்பைன்சில் போர் பயிற்சியில் ஈடுபட்ட மாலுமியை கொன்று 7 ஊழியர்கள் கடத்தல்
x
தினத்தந்தி 20 Feb 2017 8:45 PM GMT (Updated: 20 Feb 2017 8:33 PM GMT)

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கேயுள்ள பகுயான் தீவின் ‘தவி தவி’ பகுதியில் கடற்கொள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

மணிலா,

அப்பகுதியில் வரும் சர்வதேச கப்பல்களின் மாலுமிகள் மற்றும் ஊழியர்களை கடத்தி செல்வதும் விடுவிப்பதற்காக பெரும் தொகையை பேரமாக பேசுவதும், தராதவர்களை தலையை துண்டித்து கொல்வதும் அவர்களது வாடிக்கையாக உள்ளது. இவர்களை ஒழித்து கட்ட பிலிப்பைன்ஸ் அரசாங்கம் எவ்வளவோ முயற்சி எடுத்தும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வியட்நாம் நாட்டுக்கு சொந்தமான எம்.வி.கியாங் ஹை என்னும் கப்பல் பிலிப்பைன்ஸ் கடலோர படையுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அந்த கப்பலில் மாலுமிகள் உள்பட 25 ஊழியர்கள் இருந்தனர்.

அப்போது அங்கு அதிவேக படகில் வந்த கடற்கொள்ளையர்கள் வியட்நாம் கப்பலுக்குள் ஏறி மாலுமியுடன் தகராறு செய்தனர். பின்னர் அவரை கொன்றுவிட்டு ஊழியர்கள் 7 பேரை கடத்தி சென்றனர். அந்த கப்பலில் இருந்த மற்ற 17 பேரையும் பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்டனர்.


Next Story