சவுதி அரேபியாவிற்கு சென்ற பாகிஸ்தான் விமானத்தில் நின்று கொண்டு பயணித்த பயணிகள்


சவுதி அரேபியாவிற்கு சென்ற பாகிஸ்தான் விமானத்தில் நின்று கொண்டு பயணித்த பயணிகள்
x
தினத்தந்தி 25 Feb 2017 7:01 AM GMT (Updated: 25 Feb 2017 7:18 AM GMT)

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏழு பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

கராச்சி

கடந்த மாதம் பாகிஸ்தான் கராச்சியில் இருந்து சவுதி அரேபியாவிற்கு மதீனாவுக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ)  விமானம் ஒன்று சென்றது.விமானத்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் நிறைந்துவிட்டது. அதன் பிறகு ஏழு பயணிகள் இருக்கையின் இரண்டு புறங்களுக்கு மத்தியில் நடக்கும் வழியில் உள்ள இடத்தில் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என்று பிஐஏவின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பான விவரங்களை முதலில் பாகிஸ்தானிய செய்தித்தாளான டான்(Dawn) வெளியிட்டது. அந்த செய்திக்குறிப்பில் அந்த ஏழு பயணிகளுக்கு விமான ஊழியர்கள் கையால் எழுதப்பட்ட பயண அனுமதிச் சீட்டை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) விமானத்தில் எப்படி ஏழு பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என்று விசாரணை நடத்தி வருவதாக பிஐஏ தெரிவித்துள்ளது.

Next Story