6 நாட்டு மக்களுக்கு பயண தடை; டிரம்பின் உத்தரவுக்கு அதிரடியாக தடைவிதித்தது அமெரிக்க நீதிமன்றம்


6 நாட்டு மக்களுக்கு பயண தடை; டிரம்பின் உத்தரவுக்கு அதிரடியாக தடைவிதித்தது அமெரிக்க  நீதிமன்றம்
x
தினத்தந்தி 16 March 2017 5:39 AM GMT (Updated: 2017-03-16T11:09:07+05:30)

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 6 நாடுகளைச்சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், அமெரிக்க நீதிமன்றம் டிரம்ப் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்து வருகிறார். அந்த வகையில், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு நாடுகளில் இருந்து வரும் அமெரிக்கா வருவதற்கு அகதிகளுக்கு 120 நாட்கள் தடையும், மக்களுக்கு 90 நாட்களுக்கு தடையும் விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

 பயங்கரவாதிகள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடுக்கும் விதமாக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் வலியுறுத்தி இருந்த வேளையில், விமர்சகர்கள் இது பாரபட்சமானது என்று தெரிவித்திருந்தனர்.
 
டிரம்ப் விதித்த இந்த பயண தடை அமலுக்கு வருவதற்கு முன்னரே அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் அதிரடியாக தடைவிதித்துள்ளது. இது டிரம்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இதையடுத்து தனது  ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், இது முன்னெப்போதும் இல்லாதளவு ஒரு மிகுதியான நீதித்துறையின் தலையீடு.

 தேசிய நலனுக்காக குடியேற்றங்களுக்கு தற்காலிக தடை விதிக்க இந்த நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் அதிபருக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது. நாம் வெற்றி பெற போகிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story