முக்கிய தகவல்கள் அடங்கிய அமெரிக்க பாதுகாப்பு படையின் மடிக்கணினி திருட்டு


முக்கிய தகவல்கள் அடங்கிய அமெரிக்க பாதுகாப்பு படையின் மடிக்கணினி திருட்டு
x
தினத்தந்தி 18 March 2017 9:15 PM GMT (Updated: 2017-03-19T01:15:19+05:30)

அமெரிக்க பாதுகாப்பு படையின் முக்கிய தகவல்கள் அடங்கிய மடிக்கணினி திருட்டு

வாஷிங்டன்,

அமெரிக்க பாதுகாப்பு படையின் ஒரு அங்கமாக திகழ்வது ‘சீக்ரட் சர்வீஸ்’ என்னும் உளவுப்பிரிவு. அதன் ஏஜெண்டு ஒருவர் புருக்ளின் நகரில் உள்ள சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு வெளியே சென்றார். தனது வேலையை முடித்து விட்டு அவர் திரும்பி வந்தபோது அந்த காரின் பின் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக்கிய தகவல்கள் அடங்கிய மடிக்கணினியையும், இன்னும் சில சாதனங்களையும் கொண்ட முதுகுப்பை திருடப்பட்டது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

அந்த மடிக்கணினியில் ஜனாதிபதி டிரம்புக்கு சொந்தமான நியூயார்க் டிரம்ப் டவரின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களும் அடங்கி உள்ளதாம். அதுமட்டுமின்றி டிரம்ப், ஹிலாரி கிளிண்டன், போப் ஆண்டவர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களை அறிய உதவுகிற ஏஜெண்டின் ‘லேபல் அசைன்மென்ட் பின்’களும் திருடப்பட்டு விட்டன. அந்த மடிக்கணினியில் உள்ள தகவல்களை தொலைவிடங்களில் இருந்து அதிகாரிகளால் அழித்து விட முடியாது. திருடப்பட்ட முதுகுப் பை மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் மடிக்கணினி உள்ளிட்ட சாதனங்கள் இல்லை.

இந்த சம்பவத்தை உளவுப்பிரிவு செய்தி தொடர்பாளர் கேத்தி மில்ஹோவன் உறுதி செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உளவுப்பிரிவினால் வழங்கப்படுகிற மடிக்கணினிகள் பல அடுக்கு பாதுகாப்புகளை கொண்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story