இலங்கை குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து 11 பேர் பலி


இலங்கை குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து 11 பேர் பலி
x
தினத்தந்தி 15 April 2017 3:29 PM GMT (Updated: 2017-04-15T20:58:47+05:30)

இலங்கை தலைநகர் கொழும்பில் வடக்கு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர்.

கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்பு வடக்கு பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குப்பைமேடு மளமளவென சரிந்து விழுந்தது. இந்த தீ விபத்து அருகில் உள்ள வீடுகளில் தீ வேகமாக பரவியது. இதனால் மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதில் 50 முதல் 100 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்தில்  4 குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் முழுமையாக கிடைக்கவில்லை என இலங்கை போலீசார் கூறியுள்ளனர்.

Next Story