இங்கிலாந்தில் முன்னதாகவே பொதுத்தேர்தல் பிரதமர் தெரசா மே அறிவிப்பு


இங்கிலாந்தில் முன்னதாகவே பொதுத்தேர்தல் பிரதமர் தெரசா மே அறிவிப்பு
x
தினத்தந்தி 18 April 2017 10:48 AM GMT (Updated: 18 April 2017 10:47 AM GMT)

இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு வரும் ஜூன் மாதம் 8-ம் தேதி நடைபெறும் என பிரதமர் தெரசா மே அறிவித்து உள்ளார்.

லண்டன், 

அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பாக தெரசா மே 3 ஆண்டுகளுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவித்து உள்ளார். 

இங்கிலாந்து தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிகாலம் 2020-ம் ஆண்டு முடிகிறது. முன்னதாக தெரசா மே பேசுகையில் வழக்கமான முறையில் தேர்தல் அதாவது 2020ம் ஆண்டுதான் நடைபெறும் என கூறியிருந்தார். இந்நிலையில் முன்னதாகவே தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தெரசா மே வெளியிடுவார் என தகவல்கள் பரவிய நிலையில் இப்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கான அறிவிப்புக்கான மசோதாவை அவர் புதன்கிழமை முன்மொழிகிறார். கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

தெரசா மே பேசுகையில், “இப்போது நாம் பொதுத்தேர்தலை நடத்தவில்லை என்றால் அரசியல் விளையாட்டானது தொடரும். ஐரோப்பிய யூனியன் உடனான பேச்சுவார்த்தை மோசமான நிலையை எட்டும். நாம் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும், இப்போதே அதனை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. எங்களுடைய நோக்கங்களுக்கு நீங்கள் சவால் விடுத்து உள்ளீர்கள்,” என்றார். பொது தேர்தல் தொடர்பான மசோதாவிற்கு அனைவரும் ஆதரவு அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்த தெரசா மே, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பான நம்முடைய திட்டத்தை முன்வைப்போம், மக்கள் அதனை தீர்மானிக்கட்டும், என கூறிஉள்ளார். 

கடந்த வருடம் ஜூலையில் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்கு ஆதரவாக பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வெளியானது. இதில் தனது கருத்துக்கு மாறாக முடிவு அமைந்ததால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதாகவும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தெரசா மே அடுத்த பிரதமராக பொறுப்பேற்பார் எனவும் கூறினார், இதனையடுத்து பொறுப்பு ஏற்ற தெரசா மே பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் விவகாரத்தில் சவால்களை எதிர்க்கொண்டு வருகிறார். 

Next Story