3 வாரத்தில் கோழி முட்டைகளை அடைகாத்து பொரிய வைத்த ஆண்: அதிசய சம்பவம்


3 வாரத்தில் கோழி முட்டைகளை அடைகாத்து பொரிய வைத்த ஆண்: அதிசய சம்பவம்
x
தினத்தந்தி 22 April 2017 9:48 AM GMT (Updated: 22 April 2017 9:47 AM GMT)

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆபிரகாம் பாயின்சிவல் என்பவர் மூன்று வாரங்களாக 9 கோழி முட்டைகளை அடைகாத்து, கோழிக் குஞ்சுகளைப் பொரித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரிசி தன் வினோதமான செயல்களால் மக்களின் கவனங்களை ஈர்த்து வருபவர் ஆப்ரஹாம் பாய்ன்செவல் .

இவர் தற்போது புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். அதில் அவர் சாதித்தும் காட்டியுள்ளார். அதாவது கோழிமுட்டைகளை தன்னால் அடைகாத்துப் பொரியவைக்க முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளார்.

பாரிஸில் உள்ள ஒரு கண்காட்சியகத்தில் மூன்று வாரங்கள் முட்டைகளின் மேல் அமர்ந்து அடைகாத்துள்ளார்.

    Le premier poussin de #Poincheval a vu le jour hier. Suivez le direct @palaisdetokyo https://t.co/krMfMDZfNg pic.twitter.com/rEl5i1dCWe
    — Jean-François Guyot (@JFGuyot) April 19, 2017

அடைக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டகத்துக்குள், வெப்ப நிலையை அதிகரிக்கும் உணவுகளை மட்டுமே உட்கொண்டு அவர் மூன்று வாரங்கள் அதன் உள்ளேயே உறங்கியுள்ளார். அதன் பின் குஞ்சும் பொரிந்துள்ளது.

தான் அடைகாத்துப் பொரியவைத்த கோழிக் குஞ்சுகளைத் தனது பண்ணையில் வளர்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.

ஆபிரகாமின் இந்த செயலுக்கு 'பீட்டா' உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Watching the man hoping to hatch a chicken... Happy Easter everyone... #AbrahamPoincheval #OEuf @PalaisdeTokyo pic.twitter.com/feysEwUnNI
    — Claire Egan (@ClaireEgan1) April 16, 2017

Next Story