கார்டூன் படத்தை பார்த்து பாராசூட்போல் குடையுடன் 10 வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்


கார்டூன் படத்தை பார்த்து பாராசூட்போல் குடையுடன் 10 வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்
x
தினத்தந்தி 22 April 2017 10:55 AM GMT (Updated: 2017-04-22T16:24:54+05:30)

கார்டூன் படத்தை பார்த்து பாராசூட்போல் குடை செயல்படும் என குடையுடன் 10 வது மாடியில் சிறுவன் ஒருவன் குதித்து உள்ளான்.கிழக்கு சீனாவில் ஜியாங் யூ சு மாகாணத்தில் சுஹோ என்ற 7 வய்து சிறுவன் தனது பெற்றோருடன் ஒரு குடியிருப்பின் 10 வது மாடியில் வசித்து வந்தான். சம்பவத்தன்று டிவியில் கார்டூன் படம் ஒன்று பார்த்து கொண்டு இருந்தான். அதில் ஹீரோ செய்யும் சாகசத்தை பார்த்த சிறுவன் ஒரு குடையை விரித்து வைத்து 10ம் வது மாடியில் இருந்து குதித்து உள்ளான். குடையை பாராசூட் போல் நினைத்து உள்ளான். இதில் தரையில் விழ்ந்த சிறுவன் பலத்த காயம் அடைந்தான் உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து சிறுவுனை உறவினர் ஒருவர் கூறும் போது சிறுவன் டிவியில் கார்ட்டூன் படம் பார்த்து உள்ளான்.அதில் வரும் ஹீரோவை பார்த்து குடையை பாராசூட்டாக பயன்படுத்தலாம் என கற்பனை செய்து இந்த காரியத்தை செய்து உள்ளான். நல்ல வேளை சிறுவனின் உயிருக்கு ஆபத்து இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story