சிரியாவின் அறிவியல் ஆய்வு அமைப்புக்கு அமெரிக்கா தடை


சிரியாவின் அறிவியல் ஆய்வு அமைப்புக்கு அமெரிக்கா தடை
x
தினத்தந்தி 24 April 2017 7:35 PM GMT (Updated: 2017-04-25T01:04:48+05:30)

அமெரிக்க அதிகாரிகள் சிரியாவில் நடைபெற்ற சரின் எனும் விஷவாயு தாக்குதல் தொடர்பாக சிரியாவின் அறிவியல் மற்றும் ஆய்வு அமைப்பின் மீது ஒட்டுமொத்த தடையை விதித்துள்ளதாக தெரிவித்தனர்.

வாஷிங்டன்

இந்த அமைப்பின் 271 பணியார்கள் தொடர்புடைய அனைத்து அமெரிக்க சொத்துக்களையும் முடக்கி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் எந்தவொரு தனி நபரும், அமெரிக்காவின் நிறுவனமும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மீது வீசப்பட்ட விஷ வாயுத் தாக்குதலுக்கு இந்த சிரிய அமைப்பே காரணம் என்று அமெரிக்க உளவுத் துறை கருதுகிறது. இதையடுத்தே இத்தடை விதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெர்மன் அதிபர் மெர்கலைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிரியா, ஏமன் மற்றும் வடகொரியா விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. வட கொரியாவினால் ஏற்பட்டுள்ள உடனடி ஆபத்து பற்றி இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் நடந்து வரும் மோதல்கள் குறித்தும் பேசினர். மின்ஸ்க் மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில் கிழக்கு உக்ரைனில் பேச்சுவார்த்தையின் மூலம் மோதலை தீர்க்க ஜெர்மன், பிரஞ்சு நாடுகளின் முயற்சிக்கும் டிரம்ப் ஆதரவு தெரிவித்தார்.


Next Story