சீனாவில் முஸ்லீம் குழந்தைகளுக்கு பெயர் வைக்க தடை


சீனாவில் முஸ்லீம் குழந்தைகளுக்கு பெயர் வைக்க தடை
x
தினத்தந்தி 25 April 2017 2:04 PM GMT (Updated: 25 April 2017 2:03 PM GMT)

சீனாவில் முஸ்லீம் குழந்தைகளுக்கு பெயர் வைக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பிஜீங்,

சீனாவில் சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். சீன அரசின் புதிய சட்டத்தின்படி முஸ்லிம்கள், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் துணியை அணிவது மற்றும் வழக்கத்திற்கு மாறாக நீளமான தாடி வளர்ப்பது,  தொழுகை நடத்தக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம் குழந்தைகளுக்கு முஸ்லிம்,குரான்,மெக்கா,ஜிகாத்,இமாம்,சதாம்,ஹஜ் மற்றும் மதினா உள்ளிட்ட 12 விதமான பெயர்கள் வைக்க சீன அரசு தடை விதித்துள்ளது. சீன அரசின் இந்த தடையால் அங்கு வசிக்கும் முஸ்லிம்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story