வடகொரிய அதிபருக்கு சித்தபிரமை அமெரிக்க ஐ நா தூதர் குற்றசாட்டு


வடகொரிய அதிபருக்கு சித்தபிரமை அமெரிக்க ஐ நா தூதர் குற்றசாட்டு
x
தினத்தந்தி 15 May 2017 10:48 AM GMT (Updated: 2017-05-15T16:18:06+05:30)

அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் அவைக்கான தூதர் நிக்கி ஹேலி வட கொரியா தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு சித்த பிரமை பிடித்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.வட கொரியா மீண்டும் புதிய பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதை தொடர்ந்து, அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் அவைக்கான தூதர் நிக்கி ஹேலி வட கொரியா தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு சித்த பிரமை பிடித்திருப்பதாக  குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடகொரியா உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

செங்குத்தான கோணத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 2000 கிலோ மீட்டர் உயரத்துக்கு சென்றது. கிட்டத்தட்ட, 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணித்து ஜப்பானின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது.

புதிதாக பேலிஸ்டிக் ராக்கெட்டை உருவாக்கிய தங்களின் திறமையை பறைசாற்றவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

ஐ .நா. சபை அமைப்பு விதித்த தடைகளை மீண்டும் மீறும் விதமாக அமைந்த இந்த சோதனைகள் பரவலாக கண்டனங்களை பெற்றுள்ளது.

தென் கொரியாவில் புதிய அதிபர் பதவி ஏற்றுள்ள சில நாட்களில் நடைபெற்றுள்ள இந்த ஏவுகணை சோதனை, தென் கொரியாவுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்று எபிசி நியூஸிடம் அவர் கூறியுள்ளார்.

வட கொரியா தொடர்பான விஷயங்களில் அமெரிக்கா தன்னுடைய கடும் அணுகுமுறையை தொடரும் என்று ஹேலி தெரிவித்திருக்கிறார்.


Next Story