பாங்காக் ராணுவ மருத்துவமனையில் வெடிகுண்டு வெடித்ததில் 20 பேர் காயம்


பாங்காக் ராணுவ மருத்துவமனையில் வெடிகுண்டு வெடித்ததில் 20 பேர் காயம்
x
தினத்தந்தி 22 May 2017 10:17 AM GMT (Updated: 2017-05-22T15:46:55+05:30)

பாங்காக்கில் ராணுவ மருத்துவமனையில் வெடிகுண்டு வெடித்ததில் 20 பேர் காயம் அடைந்தனர் என போலீஸ் தெரிவித்து உள்ளது.


பாங்காக்,

தாய்லாந்தில் அரசியில் ஸ்திரமின்மை என்ற நிலையில் மூன்ற வருடங்களுக்கு முன்னதாக ராணுவம் ஆட்சியை தன்வசம் கொண்டு வந்தது. தாய்லாந்து நாட்டில் ஆட்சியை ராணுவம் தன் வசம் கொண்டுவந்த பின்னர் பிளவு வெளிப்படையாகவே காணப்படுகிறது. ஆனால் ஆட்சியை தன்வசப்படுத்திய ராணுவம் இதனை கண்டு கொள்வது கிடையாது. இந்நிலையில் பாங்காக்கில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இன்று வெடிகுண்டு வெடித்து உள்ளது. வெடிகுண்டு வெடிப்பில் 20 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தாய்லாந்து நாட்டில் அரசியல் கட்சியினர் மற்றும் பயங்கரவாத குழுக்களும் சிறியரக வெடிகுண்டுகளை பயன்படுத்தியதாக வரலாறு உண்டு. இந்நிலையில் இப்போது நடத்தப்பட்டு உள்ள வெடிகுண்டு தாக்குதலுக்கு யார் காரணம் என உடனடியாக தெரியவரவில்லை.

இந்த தாக்குதல்களுக்கு மூளையாக செயல்படுபவர்கள் யார் என்பதை கண்டறிய அந்நாட்டு போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. ராணுவ மருத்துவமனையில் வெடிகுண்டு வெடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.Next Story