பாக்தாத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் பலி


பாக்தாத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்: 13 பேர் பலி
x
தினத்தந்தி 30 May 2017 5:34 AM GMT (Updated: 30 May 2017 5:33 AM GMT)

பாக்தாத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு மூலம் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகினர்

பாக்தாத்,

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள பிரபலமான ஐஸ் கீரிம் கடை அருகே நேற்று நள்ளிரவு கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த வெடி குண்டு தாக்குதலில் 13 பேர் பலியாகினர். 24  பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. 

ஐஸ்கிரீம் கடை அருகே வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்ட காரை ரிமோ மூலம் வெடிக்கச்செய்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்லான் துவங்கிய சில தினங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.குண்டு வெடிப்பு நடைபெற்றதும் அந்த தெருக்களில் மக்கள் குழப்பத்துடன் அங்கும் இங்கும் ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. 

ரமலான் மாதத்தில்  ஈராக்கில் இது போன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு டிரக் குண்டு மூலம் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் ரமலான் மாதத்தை முன்னிட்டு புதிய ஆடைகள் வாங்க வந்தவர்கள் ஆவர். இந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று அந்நாட்டின் உள்துறை மந்திரியும் பதவி விலகினார் என்பது நினைவு கூறத்தக்கது. 

Next Story