ஈராக்கில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பகுதியை ராணுவம் மீட்டது


ஈராக்கில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பகுதியை ராணுவம் மீட்டது
x
தினத்தந்தி 26 Jun 2017 10:15 PM GMT (Updated: 2017-06-27T01:10:30+05:30)

ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி அந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளனர்.

பாக்தாத்,

அவர்களை எதிர்த்து ராணுவத்தினர் போரிட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த, மொசூல் நகரத்தின் அருகே உள்ள அல்–பாரூக் பகுதியை ராணுவத்தினர் மீட்டு தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

அல்–பாரூக் பகுதியில் உள்ள பாரம்பரியமிக்க அல்–நூரி மசூதியை கடந்த வாரம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அழித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story