ரசாயன தாக்குதல் நடந்தால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் சிரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


ரசாயன தாக்குதல் நடந்தால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் சிரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
x
தினத்தந்தி 27 Jun 2017 7:07 AM GMT (Updated: 2017-06-27T12:37:03+05:30)

சிரியா அரசு தாக்குதல் நடத்தினால் அதிக விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது.

வாஷிங்டன்,

சிரியா அரசு ரசாயன தாக்குதல் நடத்தினால் அதிக விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஐநா எச்சரிக்கை செய்துள்ளது.

சிரியாவின் தலைவர் பஷர்அல்-ஆசாத்   பொதுமக்கள் மீது ரசாயன தாக்குதல் நடத்தி ஏராளமான மக்களை கொன்று குவிக்க  தயாராகி வருவதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்து உள்ளது. இதற்கு  உங்கள் ராணுவம் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என எச்சரித்து உள்ளது.

இதனை வெள்ளைமாளிகை  செய்தி தொடர்பாளர் சீன் ஸ்பைசர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஏப்ரல் 2017 ல் நடத்திய தாக்குதல் போன்ற ஒரு தாக்குதலுக்கு சிரியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.ஆனால் சிரியா அரசு இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மேலும் அவ்வரசு 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் செய்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதியளித்துள்ளது. பின் அந்த ஒப்பந்தம் ஐக்கியநாடுகளின் பாதுகாப்பு குழுவால் ஏற்றுக்கொள்ளப்படது.

ஆனால் ஐநா பாதுகாப்பு செயலாளர் ஜிம் மட்டீஸ், சிரியா ரசாயன ஆயுதங்கள் வைத்து இருப்பதை உறுதிபடுத்தியுள்ளார். மேலும்  அவர் சிரியா அரசு தாக்குதல் நடத்தினால் அதிக விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை செய்துள்ளார். இஸ்ரேல் ராணுவம் , ஆசாத் அரசிடம் சில டன் இராசயன ஆயுதங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.


Next Story