இரவு நேர ‘போக்குவரத்து நெரிசல் சத்தம் ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படுத்தும்’ ஆய்வில் தகவல்


இரவு நேர ‘போக்குவரத்து நெரிசல் சத்தம் ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படுத்தும்’ ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 30 Jun 2017 9:34 AM GMT (Updated: 30 Jun 2017 9:34 AM GMT)

இரவு நேர ‘போக்குவரத்து நெரிசல் சத்தம் ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்து உள்ளது

சியோல்,

இரவு நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சததம் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத் தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. போக்குவரத்து     நெரிசலால் ஏற்படும் உடல் நலக் கோளாறுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து சியோல் நேஷனல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.

அதில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் சத்தத்தால் ஆண்களுக்கு 
மலட்டுதன்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக இரவுநேரத் தில் மிகவும் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பணிபுரிவோர் அல்லது தங்கியிருப்போர் இத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ஒலி அளவு 55 டெசி பில்சுக்கு மேல் இருந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே இரவு நேரத்தில் ஒலி அளவு 40 டெசிபிலுக்கு மேல் இருக்க கூடாது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இது தவிர இதய நோய்கள், மனநிலை பாதிப்பு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் போன்றவை உருவாகும்  என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2 லட்சத்து 6 ஆயிரத்து ஆண்களின் சுகாதார காப்பீடு மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 20 முதல் 59 வயது வரையினரிடம் 8 ஆண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Next Story