தாயாருக்கு தெரியாமல் பால் எடுத்ததால் சிறுமியை கயிற்றில் கட்டி தொங்க விட்ட சம்பவம்


தாயாருக்கு தெரியாமல் பால் எடுத்ததால் சிறுமியை கயிற்றில் கட்டி தொங்க விட்ட சம்பவம்
x
தினத்தந்தி 30 Jun 2017 9:49 AM GMT (Updated: 2017-06-30T15:19:29+05:30)

வியாட்நாமில் ஐந்து வயது சிறுமி ஒருவர் குடிப்பதற்காக பால் எடுத்ததால், அச்சிறுமியின் வளர்ப்பு தாய் சிறுமியை கயிற்றில் கட்டி தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியட்னாமின் தோ மாகாணத்தைச் சேர்ந்த 5-வயது சிறுமி ஒருவர், அவரது வளர்ப்பு தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

ஏனெனில் அவரது பெற்றோர் ஒரு குற்றதிற்காக சிறை தண்டனை அனுபவித்து வருகினறனர்.

இதன் காரணமாக அக்குழந்தை புவோங் என்ற வளர்ப்பு தாயிடம் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சிறுமிக்கு பசி எடுத்துள்ளது.

இதனால் சிறுமி அவரது வளர்ப்பு தாயான புவோங்கிடம் கேட்காமல் அங்கிருந்த பாலை எடுத்து குடித்துள்ளார்.

ஆத்திரமடைந்த புவோங் சிறுமியின் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டி, பின்னர் வீட்டுக் கூரையில் இருக்கும் கம்பியில் கயிற்றின் முறுமனையை கட்டிவிட்டார். இதனால் சிறுமி அந்தரத்தில் தொடங்கவிடப்பட்டாள்.

அந்தரத்தில் தொங்கவிடப்பட்ட சிறுமி வலி தாங்கமுடியாமல் கத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீசார் வளர்ப்பு தாய் புவோங்கை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட சிறுமிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story