30 வருடங்களில் நாம் நிலவில் அடித்தளம் அமைப்போம்-ஸ்டீபன் ஹாக்கிங்


30 வருடங்களில் நாம் நிலவில் அடித்தளம் அமைப்போம்-ஸ்டீபன் ஹாக்கிங்
x
தினத்தந்தி 30 Jun 2017 11:17 AM GMT (Updated: 1 July 2017 6:31 AM GMT)

உலக புகழ் பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் 30 வருடங்களில் நாம் நிலவில் அடித்தளம் அமைப்போம் அதன் பிறகு செவ்வாய் செல்வோம் என கூறினார்.

உலக புகழ் பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:-

மனிதன் இன்னும் 20 ஆண்டுகளில் மனிதன் செவ்வாய் கிரகத்தில் காலடி வைத்து விடுவான்.செவ்வாயில் மனிதன் வாழவதற்கான தொழில் நுட்பங்கள்  கிட்டதட்ட தயாராகி விட்டது.

இன்னும் 30 ஆண்டுகளில் நாம் அங்கு மனிதன் வாழ அடித்தளமிடப்படும். நிலாவில்  இருந்து விண்வெளியின் மற்ற பகுதிகளுக்கு செல்ல  பயனுள்ளதாக இருக்கும்.

சந்திரன் சிறியது, வளிமண்டலம் இல்லை, சூரிய கதிர்வீச்சு மற்றும் துகள்கள்  திசை திருப்ப முடியாது அது பூமியில் இருப்பது போலவே உணர்த்தும். அங்கு எந்த திரவமும் இல்லை, ஆனால் வடக்கு மற்றும் தெற்கு துருவ பகுதிகளில்  உறைபனி இருக்கலாம்.

பயணிகள் அணு ஆற்றல் அல்லது சூரிய சக்தி மூலம் எடுக்கபடும் ஆக்சிஜனை ஆதாரமாக பயன்படுத்தலாம்.சந்திரன் சூரிய மண்டலத்தின் மற்ற கிரகங்களுக்கும் பயணிக்க ஒரு மையமாக அமையலாம். சந்திரனை  தொடர்ந்து நமது அடுத்த இலக்கு செவ்வாய்யாக இருக்கிறது. செவ்வாய் அடுத்த 50 ஆண்டுகளில்  அடைந்துவிடலாம். செவ்வாய் கிரகத்திற்கு வளிமண்டலம்  இருந்தது,ஆனால் 440 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அது சிதைந்து போனது. சூரிய கதிர்வீச்சு  பாதுகாப்பு இல்லாமல் செவ்வாய் விலகியது இவ்வாறு அவர் கூறினார்

Next Story