கத்தாரில் அல் ஜசிரா தொலைக்காட்சியை மூட சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது -ஐக்கிய நாடுகள்


கத்தாரில் அல் ஜசிரா தொலைக்காட்சியை மூட சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது -ஐக்கிய நாடுகள்
x
தினத்தந்தி 30 Jun 2017 12:29 PM GMT (Updated: 30 Jun 2017 12:29 PM GMT)

கத்தாரில் அல் ஜசிரா தொலைக்காட்சியை மூட சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது -ஐக்கிய நாடுகள்

ஜெனிவா,

போராளிகளுக்கு உதவி செய்ததாக கூறி கத்தார் நாட்டிற்கு மற்ற அரேபிய நாடுகள் தடை செய்தன. அதை தொடர்ந்து சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், பக்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நான்கு நாடுகள் சில நிபந்தனைகள் விதித்தன. அதன் படி தோஹாவில் உள்ள  இராணுவ தளத்தை மூட வேண்டும் மேலும் அல் ஜசிரா தொலைக்காட்சியை மூட வேண்டும் மற்றும் ஈரான் உடனான உறவை முறித்து கொள்ள வேண்டும் என கூறியது.

இவ்வறிக்கையை அடுத்து  ஐக்கிய நாடுகளின் உயர் ஆய்வாளரான ஜீத் ராத் அல் ஹுசைன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து ஜீத் ராத் அல் ஹுசைனின் செய்தி தொடர்பாளரான ருபெர்ட் கால்வில்லி பத்திரிக்கையாளர்களிடம், அரேபிய நாடுகள் கத்தாரின் அல் ஜசிரா தொலைக்காட்சியையும் அதன் தொடர்புடைய மற்ற ஊடகங்களையும் மூட வேண்டும் என கூறியுள்ளது.

இது  ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். நீங்கள் தொலைக்காட்சியை பாருங்கள் அல்லது பார்க்காது இருங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லையென்றாலும்,  அரேபிய மற்றும் ஆங்கில தொலைக்காட்சியான அல் ஜசிராவிற்கு பல இலட்சம் பார்வையாளர்கள் இருக்கின்றனர். அதற்கு தடை விதிப்பது, வெளிப்பாடு மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரத்திற்கு எதிரானது என கோல்வில்லி தெரிவித்துள்ளார்.

Next Story