உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 30 July 2017 10:45 PM GMT (Updated: 2017-07-31T01:15:39+05:30)

கொலம்பியா நாட்டில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தங்க சுரங்கம் ஒன்றில் நேரிட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

* வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அந்த நாட்டை அச்சுறுத்தும் வகையில் கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

* கொலம்பியா நாட்டில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தங்க சுரங்கம் ஒன்றில் நேரிட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

* கென்யாவில் துணை அதிபர் வீட்டில் வில்லியம் ரூட்டோ வீட்டில் நேற்று முன்தினம் நடந்த மோதலில் ஒரு போலீஸ் அதிகாரியும், தாக்குதல் நடத்திய நபரும் கொல்லப்பட்டனர்.

* தைவானில் ‘நேசாட்’ என்னும் புயல் நேற்று தாக்கியது. இதில் நேரிட்ட சம்பவங்களில் 80-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். பல்லாயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

* உகாண்டாவில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கம் காரணமாக மக்களிடையே பதற்றம் நிலவினாலும், பாதிப்பு இல்லை.

* ‘ஒபாமா கேர்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு மாற்றாக தனது நிர்வாகம் கொண்டு வருகிற மசோதாவை அமெரிக்க பாராளுமன்றம் ஏற்று, நிறைவேற்றாவிட்டால், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணப்பட்டுவாடா வழங்குவது முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் ‘டுவிட்டர்’ பதிவில் எச்சரித்துள்ளார்.

Next Story