ஆப்கானில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல், 5 பேர் உயிரிழப்பு


ஆப்கானில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல், 5 பேர் உயிரிழப்பு
x

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.


காபூல், 

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலிபான், ஹக்கானி நெட்வோர்க் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதலை நடத்தி வருகிறது.

காபூல் நகரில் பாதுகாப்பு நிறைந்த அமெரிக்க தூதரகத்தின் அருகே உள்ள காபூல் வங்கியில் தற்கொலைதாரி உடலில் பொருத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதில் 5 பேர் பலியாகினர் என அந்நாட்டு அதிகாரிகள் கூறிஉள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு கூறவில்லை. தலிபான் பயங்கரவாத இயக்கம் நடத்தியிருக்க கூடும் என கூறப்படுகிறது.

Next Story