உக்ரைன் ராணுவ வெடிமருந்து கிடங்கில் தீ: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்


உக்ரைன் ராணுவ வெடிமருந்து கிடங்கில் தீ: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 27 Sep 2017 10:56 AM GMT (Updated: 2017-09-27T16:26:10+05:30)

உக்ரைன் ராணுவ வெடிமருந்து கிடங்கில் தீ பற்றியது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கீவ்,

கிழக்கு ஐரோப்பிய நாடான  உக்ரைன் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் திடீர் தீ ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகாமையில் வசித்து வந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 உக்ரனில் உள்ள  வின்னைட்சியா பிராந்தியத்தில் உள்ள வெடி மருந்து கிடங்கில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அங்குள்ள ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. வெடிமருந்து கிடங்கில் இருந்து பெருமளவு தீப்பிழம்புகள் வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தையடுத்து உக்ரைன் பிரதமர் வோலோட்மிர் க்ரோஸ்மன் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை நேரில் பார்வையிட்டார். இந்த சம்பவத்திற்கு வெளிப்புற காரணிகளே காரணம் என்றும் குற்றம் சாட்டிய உக்ரைன் பிரதமர், இந்த  நாசவேலை குறித்து உக்ரைன் பாதுகாப்பு சேவை விசாரணை நடத்தும் என்றார். 

Next Story